துணிந்தவன், சிந்திக்கிறான்!
சிந்திப்பவன், செயல்படுத்திகிறான்!
செயல்படுத்துகிறவன், சாதிக்கிறான்!
வியாபாரம் செய்பவன் உலகையே ஆள்கிறான்…
இந்த கூற்று எந்த அளவிற்கு உண்மை என்பதை சிறிது நேரம் உங்கள் மனதில் அமைதியாக எண்ணங்களை அசைப்போட்டுப்பாருங்கள்… உண்மை புலப்படும்..
1. சாதிப்பதின் ஆரம்பம் இங்கே தான் தொடங்குகிறது!
இன்று இந்தியாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிப்பை முடிக்கும் 100 பேரில், 95 பேர் வேலைக்குத்தான் செல்கிறார்கள். இதில் சில பேர் மட்டுமே தங்களுடைய படிப்பிற்கு தகுந்த வேலையைப் பார்க்கிறார்கள். அப்படிப் பார்த்தாலும் அவர்கள் எதிர்பார்த்த வருமானம் கிடைப்பதில்லை. பலருடைய வாழ்க்கை சக்கரம், பள்ளி அல்லது கல்லூரி படிப்பை முடித்தல், வேலை தேடி அலைதல், குடும்ப சூழ்நிலை காரணமாக ஏதாவது ஒரு வேலைக்குச் செல்லுதல், வேலையில் அதிருப்தி, இதில் ஒரு பிரிவினர் வேலை பிடிக்காமல் வேறு வேலை தேடுகின்றனர். இப்படி நிலையில்லாமல் சுழன்று கொண்டு இருக்கும் போது நமது எண்ண சுழற்சியில் நாம் ஏற்படுத்தும் ஒரு சிறு மாற்றத்தின் மூலம் சாதிப்பதின் விதை விதைக்கப்படுகிறது.
2. துணிந்தவன் சாதிக்கிறான்!
ஒரு பிரிவினர் குடும்ப சூழ்நிலை காரணமாக ஏதாவது ஒரு வேலைக்குச் செல்வதால், பல பேர் அவர்களுடைய கனவுகள் மற்றும் லட்சிய பாதையை விட்டு விலகிச் செல்வதாலும் செய்யும் வேலையில் முழுமையான ஈடுபாடு காட்ட முடியாமல் பலர் விரக்தியுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அல்லது விரக்தியுடன் வாழ்க்கையை முடிக்கிறார்கள். இதுதான் இன்றைய நிதர்சனமான உண்மை. இதில் ஒரு சிலர் தான் தங்களுடைய குடும்பச் சுமைகளையும் தாண்டி தாம் நினைத்த லட்சியப்பாதையில் சென்று வாழ்க்கையிலும், சமுதாயத்திலும் சாதிக்கிறார்கள். அவர்களில் ஒருவராக நீங்கள் இருக்க வேண்டுமா? இன்னும் சில நிமிடங்களில் நீங்களும் அந்த ஒருவராக மாறலாம். தொடர்ந்து பயணிப்போம்!
4.தனக்கான திறமையை கண்டுபிடிக்கும் வாய்ப்பு!
வேலை அல்லது தொழில் மற்றும் வாழ்க்கையில் சாதிக்க மிக முக்கிய காரணம் தன்னிடம் உள்ள ஆழ்மனதில் உள்ள ஆர்வத்தையும், திகைப்பூட்டும் திறமையையும் கண்டுபிடித்து அபரிமிதமான சக்தியை வெளிக் கொணர்ந்து பல சாதனைகளை செய்ய ஆரம்பிக்கும் போதுதான், வாழ்க்கையில் சந்திக்கும் பல வாய்ப்புகளையும், தடைகளையும் தமக்கு சாதகமாக பயன்படுத்தி வெற்றி பெற முடியும். நமது குடும்ப சூழ்நிலை எப்படி இருந்தாலும் ஒரே சிந்தனையில் பயணித்தால் நாம் சிகரத்தைத் தொட முடியும் அதை எவராலும் தடுக்க முடியாது.
5.தொழில் முனைவோரும், சந்திக்கும் சவால்களும்
இந்த போட்டி நிறைந்த சமுதாயத்தில் 0.1 சதவீத மக்கள் தான், புதிய தொழில் தொடங்கி, அந்த தொழிலை திறம்பட நடத்திச் செல்கிறார்கள். நம்மை சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான பொருள்கள், இந்த 0.1 சதவீத மக்களின் சிந்தனை விதையில் விளைந்த விருட்சங்களே. இன்றைய தொழில் முனைவோர் சந்திக்கும் சவால்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன…
- தொழில் செயலாக்கம் பெறுதல் (Industrial Feasibility),
- சந்தைப்படுத்தக்கூடிய பொருட்கள் (Marketable Products),
- தொழில் சார்ந்த அறிவு ( technical Knowledge ),
- மூலப்பொருள் கிடைத்தல் ( Raw Material Availability ),
- தரமான இயந்திரங்கள் ( Quality Machines),
- கைதேர்ந்த பணியாளர்கள் ( Trained Labours),
- நிதி உதவி (Financial Assistance)
- சந்தைப்படுத்தும் ஆதரவு (Market Support)
இந்த சவால்கள் அனைத்தையும் எதிர்கொள்வது மற்றும் சமாளிப்பதன் மூலமாகத்தான் ஒரு தொழில் முனைவோரால் வெற்றி காண முடியும்…
இந்த சவால்களுக்கான தீர்வு இன்னும் சில நொடிகளில்…
6.இந்தியாவின் எதிர்காலம் நிச்சயம் இளைஞர்களின் கையில் தான் உள்ளது!
இந்திய மக்கள் தொகையில் 50 சதவீத மக்கள் இளைஞர்கள் ஆம், இவர்கள் கையில் தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது. குறிப்பாக சொல்லப்போனால், இன்று, வியாபார கனவு கண்டு தொழில் தொடங்கி, அதை தினமும் நேர்மையுடனும், உரத்த சிந்தனையுடனும் பராமரித்து விருட்சமாக மாற்ற தொலைநோக்கு திட்டம் கொண்ட இளைஞர்கள் கையில் தான் உள்ளது.
7.ஆசையும்...திறமையும்...கடின உழைப்பும்… வியாபார வெற்றியின் திறவுகோள்...
இங்கு உள்ள இலட்சக்கணக்கான, இளைஞர், இளைஞிகளுக்கு பல்வகை தொழில்கள் பற்றிய சந்தேகங்கள் இருக்கும். "தூக்கத்தில் பாதி, ஏக்கத்தில் பாதி" என்பது போல், சிறுவயதிலேயே தொழில் முனைவோராக வேண்டும், வெகு சீக்கிரம் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஏக்கத்தில் பாதி வாழ்க்கையும், அத்தகைய தொலை நோக்கு சிந்தனையோடு செயல்படும் போது அதில் சந்திக்கும் சவால்கள் அடுத்த மீதி வாழ்க்கையும் மெழுகு போல் கரைந்து விடுகிறது. பலர் இந்த நிலை தாண்டி அடுத்து என்ன செய்யலாம் என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கெல்லாம் தீர்வு இன்னும் சில நொடிகளில்…
8.தொழில் வெற்றி இரகசியம்
இன்றைய போட்டி உலகில் தொழிலில் வெற்றி பெற அடிப்படை தேவைகள் என்ன ?
தினம், தினம் உலகம் மாறுபட்டு கொண்டே இருக்கிறது, இந்த மாற்றத்தினால் எற்படும் சமுதாய மாற்றததை கூர்ந்து கவனித்து, தொலை நோக்கு பார்வை கொண்டு எதிர்காலத்தை கணித்து, தன்னம்பிக்கையோடு செயல்பட்டு, எதிர்காலத்தை தன்வயப்படுத்திக் கவனித்து, புரிந்து கொள்பவன் பகுத்தறிவாளன் அல்லது தொழில் முனைவோர். சமுதாயத்தை வித்தியாசமான கோணத்தில் பார்த்து, புரிந்து கொண்ட பல்வேறு விஷயங்களை மிக விரைவில் கிரகித்து கொண்டு பிறகு அதை வியாபாரத்தில் மற்றும் சொந்த வாழ்க்கையில் பயனுள்ளதாக, மிக விரைவில், மாற்றிக் கொள்வதில்தான் ஒருவருடைய தொழில் வெற்றி இரகசியம் அடங்கி உள்ளது.
இன்று நாம் காணும் பிரம்மாண்ட, லட்சக்கணக்கான கோடிகள் வர்த்தகம் செய்யும் தொழில்களுக்குப் பின்னால் உள்ள தாரக மந்திரம் என்னவென்று
தெரியுமா?
- பிரமாண்டமாக சிந்தியுங்கள் (Think Big)
- வேகமாக சிந்தியுங்கள் (Think Fast)
- வேகமாக செயல்படுங்கள் ( Act Fast)
- வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தி, போட்டியாளர்கள் வாய்ப்பு உள்ளது என்று சிந்திக்கும் முன் வெற்றி கனியைச் சுவைத்து விடுங்கள்.(Grab the opportunity, before others could smell that there exit an opportunity)
இன்றைய உலகம், புதிய புதிய பொருட்களுக்கு பின்னால் உள்ளது. பல்வேறு நிறுவனம் மற்றும் அதில் உள்ள தனி மனிதனின் மாறுபட்ட எண்ணம் தான் என்ற உண்மையை சற்று சிந்தித்தால் ஒவ்வொருவருக்கும் நன்றாக புரியும்.
அப்படிப்பட்ட முற்றிலும் மாறுபட்ட, ஆக்கப்பூர்வமான மற்றும் வினோதமான தொழில் வாய்ப்பை தான் எங்கள் LEXY PRINTINNOVATE நிறுவனம் “LEXY FRANCHISE” என்ற வியாபார வாய்ப்பினை எந்த ஒரு தொழில் முனைவோரும் எளிதில் தொடங்குவதற்குத் தேவையான தரமான இயந்திரங்கள், கருவிகள், உபகரணங்கள், திட்டங்கள், ஆலோசனைகளையும் தருவதோடு மட்டுமில்லாமல், மேற் குறிப்பிட்ட அனைத்து சவால்களுக்கான தீர்வையும் தருகிறோம். நீங்கள் வெற்றி பெருவதில் தான்..எங்கள் வெற்றியும் உள்ளது.
எங்கள் நிறுவனத்திற்கு வாருங்கள்.. வெற்றியை உணர்வுப்பூர்வமாக உணருங்கள்!
LEXY FRANCHISE – வியாபாரத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
மேலும் விவரங்களுக்கு
www.lexy.in. என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.
For Franchise Info Booklet Please visit
http://goo.gl/dSf4Jm